சாபுதானா வடை
சாபுதானா வடை
தேவையானவை:
ஜவ்வரிசி - அரை கப்
உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய் - 2
மெல்லியதாக நறுக்கிய இஞ்சி
- ஒரு டீஸ்பூன்
வேர்க்கடலை - கால் கப்
சர்க்கரை -
நறுக்கிய கொத்தமல்லித்தழை
- ஒரு டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஜவ்வரிசியை தேவையான அளவு நீர் விட்டு 5 மணி நேரம் ஊற வைக்கவும். உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து வேக விடவும். ஜவ்வரிசி ஊறியதும் கைகளால் மசித்து, வெந்த உருளைக்கிழங்கையும் சேர்த்து மசிக்கவும், வேர்க்கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்து, பச்சைமிளகாயை நறுக்கி இஞ்சி, கொத்தமல்லித்தழை, சர்க்கரை, அரிசி மாவு, சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து எண்ணெயைக் காய வைத்து காய்ந்ததும், கலந்த மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு (சிம்மில் வைத்து) ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, பொன்னிறமானதும் எடுக்கவும். பொரித்த வடைகளை வடிதட்டில் போட்டு எண்ணெயை வடிய விடவும்.

No comments:
Post a Comment