Saturday, 1 October 2016

பாலாடைக் கொழுக்கட்டை

பாலாடைக் கொழுக்கட்டை

பாலாடைக் கொழுக்கட்டை

 

தேவையானவை:

 சிறிய சைஸ் பாலாடை - அரை கப்

 பெருங்காயம் - ஒரு சிட்டிகை

 கேரட் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்

 பச்சைப் பட்டாணி- 2 டேபிள்ஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 அரிசி மாவு - ஒரு கப்

 தேங்காய்த் துருவல்   - 2 டேபிள்ஸ்பூன்

 நல்லெண்ணெய், தேங்காயெண்ணெய்- தலா ஒரு டேபிள்ஸ்பூன்

 கடுகு - ஒரு டீஸ்பூன்

 காய்ந்த மிளகாய் - 2

 கறிவேப்பிலை - ஒரு கொத்து

 நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்

 பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்

 

செய்முறை:

பாலாடையை ஒரு கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேக விடவும். பிறகு, பட்டாணியையும் சேர்க்கவும். இரண்டும் சேர்ந்து வெந்ததும் வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காயெண்ணெய் விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கேரட் துருவல், தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, இதில் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து வந்ததும், ஒரு டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு தூவி கலந்து விட்டு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். இதுதான் பூரணம். ஆறியதும் சிறிய அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தில் 2 கப் நீர் விட்டு உப்பு, நல்லெண்ணெய் சேர்க்கவும். நீர் கொதித்ததும் அரிசி மாவைச் சேர்க்கவும். மாவு வெந்ததும் இறக்கி, கை பொறுக்கும் சூடு வந்ததும், மாவை உருட்டி சொப்பு செய்து உள்ளே பூரண உருண்டையை வைத்து மூடி, இட்லித் தட்டில் வைத்து 8 நிமிடம் சிம்மில் வேகவைத்து எடுக்கவும். வித்தியாசமான சுவையில் பாலாடைக் கொழுக்கட்டை தயார்.

 

குறிப்பு:

பாலாடை சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்.

இந்த கொழுக்கட்டை கேரளாவில் பிரசித்திபெற்றது.

 

No comments:

Post a Comment