Wednesday 5 October 2016

வெஜிடபிள் சப்ஜி சாண்ட்விச்

வெஜிடபிள் சப்ஜி சாண்ட்விச்

வெஜிடபிள் சப்ஜி சாண்ட்விச்

 

தேவையானவை:

 

பெரிய வெங்காயம் (மீடியம் சைஸ்) - 1 (பொடியாக நறுக்கவும்)

தக்காளி - 1 (பொடியாக நறுக்கவும்)

கேரட் - 75 கிராம் (பொடியாக நறுக்கவும்)

பீன்ஸ் - 75 கிராம் (பொடியாக நறுக்கவும்)

உருளைக்கிழங்கு - 115 கிராம்

பச்சைப் பட்டாணி - 40 கிராம்

இஞ்சி - 1 துண்டு (நசுக்கவும்)

பூண்டு - 2 பல் (நசுக்கவும்)

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

மல்லித்தூள்  (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்

சீரகத்தூள் - கால் டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - அரை டேபிள்ஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

சோம்பு - கால் டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 

செய்முறை:

 

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சீரகம், சோம்பு சேர்த்து வெடிக்க விடவும். இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதில் வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கி, தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் பீன்ஸ், உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் நான்கு நிமிடம் வேக விடவும். மூடியைத் திறந்து கேரட், பச்சைப் பட்டாணி சேர்த்துக் கிளறி மூடி போட்டு மூன்று நிமிடம் வேக விடவும். காய்கறிகள் எல்லாம் வெந்ததும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து வேக விடவும். பச்சை வாசனை போனதும் கொத்தமல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும்.

 

சாண்ட்விச் செய்ய:

 

பிரெட் ஸ்லைஸ்கள் - 10

வெண்ணெய்/ஆலிவ் ஆயில் - சிறிதளவு

ரெடி செய்துள்ள வெஜிடபிள் கலவை- சிறிதளவு

துருவிய சீஸ் - சிறிதளவு

 

செய்முறை:

 

பிரெட்டின் பிரவுன் நிற ஓரங்களை நீக்கவும். பிரெட்டின் மேல் வெண்ணெய்/ஆலிவ் ஆயில் தடவவும். பிரெட்டின் மேல் காய்கறிக் கலவையை இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்து வைத்து, அதன் மேல் சீஸைத் தூவவும். இதனை மற்றொரு பிரெட்டால் மூடவும். டோஸ்டரில் பிரெட்டுகளை டோஸ்ட் செய்து, வெண்ணெய் தடவி சாப்பிட்டால் அருமையான சப்ஜி சாண்ட்விச் ரெடி.

 

No comments:

Post a Comment