Monday, 3 October 2016

அவியல்

அவியல்

அவியல்

 

தேவையானவை:

 

 தயிர் - 200 மில்லி

 புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

 கேரட் - 100 கிராம்

 பீன்ஸ் - 100 கிராம்

 சௌசௌ - 1

 முருங்கைக்காய் - 1

 கொத்தவரங்காய் - 50 கிராம்

 புடலங்காய் - 50 கிராம்

 சேனைக்கிழங்கு - 50 கிராம்

 பூசணி - 100 கிராம்

 வாழைக்காய் - 1

 உப்பு - தேவையான அளவு

 

தாளிக்க:

 

 கடுகு - கால் டீஸ்பூன்

 உளுந்து - கால் டீஸ்பூன்

 கறிவேப்பிலை - சிறிதளவு

 தேங்காய் எண்ணெய் - 50 மில்லி

அரைக்க:

 தேங்காய் - அரை மூடி

 சீரகம் - ஒரு டீஸ்பூன்

 பச்சைமிளகாய் - 3

 

செய்முறை:

 

அரைக்க கொடுத்துள்ளவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும். காய்களை நீளமாக நறுக்கிக்கொள்ளவும். பூசணிக்காய், சேனைக்கிழங்கு தவிர்த்து மற்ற காய்களை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். சேனைக்கிழங்கை புளித்தண்ணீரில் தனியே வேகவைத்துக்கொள்ளவும். காய்கள் வெந்ததும் தண்ணீரை வடித்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை சேர்த்து தாளித்து வேக வைத்த காய்கள், பூசணிக்காய் சேர்த்து வதக்கவும். பிறகு, அரைத்த கலவை, உப்பு, தயிர் சேர்த்து நன்றாக வதக்கி, காய்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

 

 

No comments:

Post a Comment