Monday, 3 October 2016

அடைபிரதமன்

அடைபிரதமன்

அடைபிரதமன்

 

தேவையானவை:

 

 பாலடை - 100 கிராம்

 வெல்லம் - 200 கிராம்

 ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

 தேங்காய் - 1 (இரண்டு முறை பால் எடுத்துக்கொள்ளவும்)

 முந்திரி - 10 கிராம்

 திராட்சை - 10 கிராம்

 பால் - கால் கப்

 நெய் - 2 டீஸ்பூன்

 

செய்முறை:

 

சூடான நெய்யில் முந்திரி மற்றும் திராட்சையை வறுத்துக்கொள்ளவும். வெல்லத்தை கெட்டியாக இல்லாமல் தண்ணீர் பதத்தில் பாகு தயாரித்துக்கொள்ளவும். பாலடையை வேகவைக்கவும். இத்துடன்  முதல் தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள், பால், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி, இரண்டாம் தேங்காய்ப்பால் ஊற்றி, அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறவும்.

 

 

No comments:

Post a Comment