Monday, 3 October 2016

சேனை சாப்ஸ்

சேனை சாப்ஸ்

சேனை சாப்ஸ்

 

தேவையானவை:

 

 சேனைக்கிழங்கு - அரை கிலோ

 மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்

 மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

 பெருங்காயத்தூள் - சிறிதளவு

 பூண்டு - 10 பல்

 எண்ணெய் - 50 மில்லி

 புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

 கடுகு - கால் டீஸ்பூன்

 உளுந்து - கால் டீஸ்பூன்

 கறிவேப்பிலை - சிறிதளவு

 

செய்முறை:

 

சேனைக்கிழங்கை விரும்பிய வடிவில் நறுக்கிக்கொள்வதோடு, புளியைக்கரைத்து வைத்துக் கொள்ளவும். சேனையை மஞ்சள் தூள், புளித்தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து தாளித்து, வேகவைத்த சேனையை சேர்த்து வதக்கவும். இத்துடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு, மிளகுத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment