மட்டன் எலும்புக் குழம்பு
மட்டன் எலும்புக் குழம்பு
தேவையானவை:
மட்டன் எலும்பு - அரை கிலோ
தேங்காய் - அரை மூடி (துருவி அரைத்துக்கொள்ளவும்)
உருளைக்கிழங்கு - 1
சின்னவெங்காயம் - 10
தக்காளி - 2
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - முக்கால் டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய்- 50 மில்லி
செய்முறை:
எலும்பை நன்றாக சுத்தம் செய்து, இஞ்சி - பூண்டு விழுது, மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு சேர்த்துக் கலந்து குக்கரில் 7 முதல் 8 வரை விசில் வைத்து வேகவைக்கவும். பிறகு இதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து மிதமான சூட்டில் வைத்துக் கொதிக்க வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, கொதிக்க வைத்த எலும்பை இத்துடன் சேர்த்துக் கலந்து 15 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு உப்பு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

No comments:
Post a Comment