கருவாட்டுக் குழம்பு
கருவாட்டுக் குழம்பு
தேவையானவை:
கருவாடு - 200 கிராம்
புளிக் கரைசல் - 200 மில்லி
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 50 மில்லி
கடுகு - கால் டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சின்னவெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
பூண்டு - 10 (முழுதாக போடவும்)
தேங்காய் - அரை மூடி (துருவி முதல் பால் எடுத்து கொள்ளவும்)
உப்பு - தேவையான அளவு
வெந்தயம் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
செய்முறை:
சுடுதண்ணீரில் கருவாடை சுத்தம் செய்து சிறிதளவு எண்ணெயில் லேசாக வதக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், உப்பு, 300 மில்லி தண்ணீர் (புளிக்கரைசல் அளவில் இருந்து இரண்டு மடங்கு) சேர்த்துக் கலக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பெருங்காயம், சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து விட்டு, இதில் வெங்காயம், பூண்டு, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் புளிக்கரைசல் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கருவாட்டை சேர்த்து மிதமான சூட்டில் 10 நிமிடம் வேகவிடவும். இறுதியாக முதல் தேங்காய்ப்பால் கலந்து, ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.

No comments:
Post a Comment