Saturday 8 October 2016

ஆந்திரா சேனை மசியல்

ஆந்திரா சேனை மசியல்

ஆந்திரா சேனை மசியல்

 

தேவையானவை: சேனைக்கிழங்கு  அரை கிலோ, பசலைக் கீரை - 3 கட்டு, புளி  ஒரு எலுமிச்சை அளவு, உப்பு  தேவையான அளவு, மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், கடுகுத்தூள் - 1 டீஸ்பூன்

 

தாளிக்க: எண்ணெய்  ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, சீரகம்  1 டீஸ்பூன், பெருங்காயத்தூள்  சிறிதளவு

 

செய்முறை: புளியைத் தண்ணீரில் கரைத்து கரைசல் எடுத்து வைத்துக் கொள்ளவும். சேனைக் கிழங்கை தோல் சீவி பெரிய துண்டுகளாக பிரஷர் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். பசலைக் கீரையை அலசி, அதை சிறிது சிறிதாக நறுக்கி வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

 

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு ,பச்சை மிளகாய், சீரகம், பெருங்காயம் போட்டு தாளித்து, அதில் புளிக்கரைசலை விட்டுக் கொதிக்க விடவும். பின்னர் வேக வைத்து மசித்து வைத்திருக்கும் சேனைக்கிழங்கு மற்றும் பசலைக்கீரையைச் சேர்த்துக் கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூளைச் சேர்த்து கடுகுத் தூளைத் தூவிப் பரிமாறலாம்.

 

No comments:

Post a Comment