Saturday 8 October 2016

க்ரீம் ஆஃப் ப்ரோகோலி சூப்

க்ரீம் ஆஃப் ப்ரோகோலி சூப்

க்ரீம் ஆஃப் ப்ரோகோலி சூப்

 

தேவையானவை: துருவிய ப்ரோக்கோலி - 2 கப், வொயிட் சாஸ் - 2 கப், ஸ்டாக் (காய்கறிகளை வேகவைத்த தண்ணீர்) - 4 கப், உப்பு  தேவையான அளவு, மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்

 

ஸ்டாக் செய்ய: துருவிய கோஸ் - 2 கப், துருவிய கேரட் - 1 கப், நறுக்கிய லீக்ஸ் - 2 டேபிள் ஸ்பூன், நறுக்கிய செலரி - 2 டேபிள் ஸ்பூன், துருவிய நூக்கல் - 1 கப், துருவிய டர்னிப் - 1 கப்

 

ஒயிட் சாஸ் செய்ய: வெண்ணெய் - 100 கிராம், மைதா - 1 கப், பால் - 4 கப், மிளகுத்தூள்  சிறிதளவு, உப்பு  தேவையான அளவு

 

செய்முறை: ஸ்டாக் செய்யத் தேவையான பொருட்கள் அனைத்தையும் கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

 

சாஸ் செய்வதற்கு: வெண்ணெயை உருக்கி, அதில் மைதாவை சிறிது சிறிதாகச் சேர்த்து வறுக்கவும் நன்றாக வறுத்ததும் அதில் பாலைச் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும். நன்றாகக் கலந்ததும் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும்.

 

தயாராக வைத்துள்ள ஸ்டாக், மற்றும் வொயிட் சாஸ் இரண்டையும் சம விகிதத்தில் கலந்து, உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். கொதி வந்ததும் அதில் ப்ரோக்கோலியைச் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கி சுடச் சுட பரிமாறவும்.

 

No comments:

Post a Comment