செட் தோசைவடைகறி
செட் தோசைவடைகறி
தேவையானவை:
பச்சரிசி அரை கிலோ
புழுங்கலரிசி அரை கிலோ
உளுந்து கால் கிலோ
ஜவ்வரிசி 100 கிராம்
அவல் 100 கிராம்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
அவல், உப்பு தவிர மீதம் உள்ள பொருட்களைத் தனித்தனியாக தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊற விடவும். பிறகு கிரைண்டரில் அவலோடு மீதம் இருக்கும் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து, ஒரு பாத்திரத்தில் வழித்து வைக்கவும். இதில் உப்பு சேர்த்து ஆறு மணி நேரம் புளிக்க விடவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து மாவை விட்டு தோசையாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு இரண்டுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.

No comments:
Post a Comment