Sunday 9 October 2016

கேரளா நண்டுக் கறி

கேரளா நண்டுக் கறி

கேரளா நண்டுக் கறி

 

தேவையானவை:

 

 நண்டு - கால் கிலோ

 சின்னவெங்காயம் - 100கிராம்

 பொடியாக நறுக்கிய தக்காளி - 100 கிராம்

 இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

 இரண்டாக கீறிய பச்சை மிளகாய் - 2

 தயிர் - அரை கப்

 மஞ்சள்த்தூள் - கால் டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

 சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

 மல்லித்தூள் (தனியா) - ஒரு டீஸ்பூன்

 சோம்புத்தூள் - அரை டீஸ்பூன்

 கறிவேப்பிலை - சிறிது

 தேங்காய் அரைத்தது - ஒரு கப்

 பட்டை கிராம்பு ஏலக்காய் - 5கிராம்

 உப்பு - தேவையான அளவு

 தேங்காய் எண்ணெய் - பொரிக்க‌

 

செய்முறை:

 

நண்டை சுத்தமாக கழுவி அதில் மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியா), உப்பு, சோம்புத்தூள், சீரகத்தூள், ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு பேஸ்ட், தயிர் சேர்த்து, நன்கு பிசறி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய், தாளித்து கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், மீதமுள்ள ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை  போக வதக்குங்கள். இதில் பொடியாக ந‌றுக்கிய த‌க்காளியைப் போட்டு வதக்கி ஊற வைத்த நண்டைச் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு முறை கொதி வர விடுங்கள். கொதி வந்ததும் அரைத்த‌ தேங்காயைச் சேர்த்து மூன்று நிமிடத்தில் அடுப்பை அணைத்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment