பருப்புப் பாயசம்
பருப்புப் பாயசம்
தேவையானவை:
பயத்தம் பருப்பு - ஒரு கப்
கடலைப்பருப்பு - கால் கப்
வெல்லம் - 2 கப்
துருவிய தேங்காய் - கால் கப்
ஏலக்காய்ப்பொடி - ஒரு சிட்டிகை
நெய் முந்திரித்துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் லேசாக வறுத்து தண்ணீர் சேர்த்து (அதிகம் குழையாமல்) வேக விடவும். வெந்ததும் வெல்லத்தைச் சேர்த்து கொதிக்க விடவும். ஏலக்காய்ப்பொடி சேர்க்கவும். வாணலியில், நெய் விட்டு துருவிய தேங்காய், முந்திரிப்பருப்பு சேர்த்து வறுத்து, பாயசத்தில் கொட்டி இறக்கவும்.
குறிப்பு: மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு, தேங்காய், பிஸ்தா இவற்றை வறுத்துச் சேர்த்தால் ரிச்சான பருப்புப் பாயசம் தயார்.

No comments:
Post a Comment