மூங் தால் கிச்சடி
மூங் தால் கிச்சடி
தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப்
பயத்தம் பருப்பு - அரை கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
காய்கறிகள் - ஒரு கப், (கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் எல்லாம் சேர்ந்தது) (மீடியம் சைஸில் நறுக்கவும்)
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
(பொடியாக நறுக்கவும்)
தக்காளி - ஒன்று
(பொடியாக நறுக்கவும்)
சீரகம் - அரை டீஸ்பூன்
மெல்லியதாக நறுக்கிய இஞ்சி
- ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தூவி இறக்க:
நறுக்கிய கொத்தமல்லித்தழை
- 2 டேபிள்ஸ்பூன
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரிசி, பருப்பு, காய்கறிகள், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து 3 கப் நீர் விட்டு, வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு தாளிக்க வேண்டியதைச் சேர்த்துத் தாளித்து வதக்கவும். இவற்றை வெந்த சாதம், பருப்புக் கலவையில் சேர்த்து ஒரு முறைக் கிளறி இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

No comments:
Post a Comment