Sunday, 2 October 2016

கோயா மட்டர்

கோயா மட்டர்

கோயா மட்டர்

 

வடநாட்டில் பால்கோவாவை, 'கோயா' என்பார்கள். இதில் உபயோகிக்கும் கோவா சர்க்கரை போடாதது. கடையிலும் வாங்கலாம், வீட்டிலும் செய்யலாம். வீட்டில் செய்வதாக இருந்தால், பாலை ஒரு கனமான பாத்திரத்தில் (அடுப்பை மிதமாக எரியவிட்டு) அடுப்பின் மேல் வைத்து, கிண்டிக் கொண்டிருந்தால் நன்றாகக் கெட்டியாகி வரும். திரட்டிப் பால் பதத்தில் இல்லாமல் தளர இருந்தால்கூடப் போதும். விழுந்து விழுந்து காய்ச்சுவதற்குப் பதிலாக, ரெடிமேட் சர்க்கரை போடாத கோவா, கடைகளில் கிடைத்தாலும், ஊற்றிப் பயன்படுத்தலாம். இந்த சப்ஜியில் மிளகாய்த்தூள் கிடையாது. மிதமான பதத்தில் இருக்கும். தந்தூரி நாண், மசாலா நான், பரோட்டா முதலியவைகளுடன் பரிமாறலாம்.

 

தேவையானவை:

கோவா - கால் கிலோ

வெங்காயம் - 2 பெரியது (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)

கொத்தமல்லித்தழை - அரை கப் (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)

பச்சைமிளகாய் - 4 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)

மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

பால் - 2 கப்

சீரகம் - 2 டீஸ்பூன்

பச்சைப் பட்டாணி - கால் கிலோ

உப்பு - தேவையான அளவு

உப்பு சேர்க்காத வெண்ணெய் - 50 கிராம்

எண்ணெய் - கால் கப்

 

செய்முறை:

பட்டாணியைத் தோலுரித்து உப்போடு சேர்த்துக் கொதிக்க வைக்கவும். அதிகம் வேக விட வேண்டாம். தண்ணீரும் திட்டமாக இருக்கட்டும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெயைச் சூடாக்கி, வெண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகம் போட்டுத் தாளிக்கவும். பிறகு, வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு லேசாக நிறம் மாறும்வரை வதக்கவும். பிறகு, அனைத்து தூள்களையும் போட்டு வதக்கி, வேகவைத்த பட்டாணியைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். பட்டாணியைச் சேர்க்கும்போது தண்ணீருடன் சேர்க்கவும் நன்றாகக் கொதி வந்தவுடன், பாலுடன் கோவாவைக் கரைத்து கொதிக்கும் பட்டாணியுடன் சேர்த்து நன்றாகக் கொதி வந்தவுடன் கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும். இது 20 நிமிடங்களில் தயாராகிவிடும். புளிப்பு எதுவும் இல்லாத டின்னர் பார்ட்டிகளுக்கு ஏற்றி ரிச்சான டிஷ் இது.

 

 

No comments:

Post a Comment