Sunday, 2 October 2016

பனீர் பஸந்தா

பனீர் பஸந்தா

பனீர் பஸந்தா

 

தேவையானவை:

பனீர் - அரை கிலோ

 

வதக்க:

வெண்ணெய்  - ஒரு டேபிள்ஸ்பூன்,

எண்ணெய் - கால் கப்

ஷா சீரகம் - 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்

பால் - 2 கப்

பாலாடை அல்லது க்ரீம் - ஒரு கப்

 

விழுதாக அரைக்க:

தயிர் - 2 கப்

நறுக்கிய தக்காளி - 2 கப்

வெங்காயம் - 2 கப்

கஸூரி மேத்தி - 2 டீஸ்பூன்

இஞ்சி - 1 பெரிய துண்டு

பச்சைமிளகாய் - 6

குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

 

பனீர் உள்ளே ஸ்டஃபிங் செய்ய:

பனீர் அல்லது சர்க்கரை சேர்க்காத கோவா - சிறிதளவு

மைதா -  (தண்ணீருடன் பேஸ்டாக கலந்து வைத்துக் கொள்ளவும்).

கொரகொரப்பாக பொடி செய்த முந்திரி - ஒரு டீஸ்பூன்

கொரகொரப்பாக பொடி செய்த பாதாம் - ஒரு டீஸ்பூன்

பால் - சிறிதளவு

 

செய்முறை:

பனீரை நீண்ட சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். நடுவில் குறுக்குவாட்டில் வெட்டிக்கொண்டு, தயாராக வைத்திருக்கும் கோவா, முந்திரி பருப்புப் பொடி, பாதாம் பொடி, சிறிதளவு பால் முதலியவைகளைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து, பனீர் துண்டுகளின் நடுவில் வைத்து அடைத்து, சிறிதளவு மைதா பேஸ்ட் வைத்து ஒட்டி, தோசைக்கல்லில் இட்டு, சிறிதளவு எண்ணெய், வெண்ணெய் ஊற்றி, ஷா சீரகம்  சேர்த்துத் தாளிக்கவும். இப்போது விழுதாக அரைத்து வைத்த தயிர்-தக்காளி பேஸ்டைச் சேர்த்து நன்றாக சிவக்க வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். கடைசியில் பால்கீரிம் சேர்த்துக் கொதிக்கவிடவும். தயாராக வைத்துள்ள பனீர் துண்டுகளைச் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, புலாவ் அல்லது சப்பாத்தி, பரோட்டாவுடன் பரிமாறவும்.

 

குறிப்பு:

ஷா சீரகம் என்பது சீரகத்தில் ஒரு வகை. சோம்பும் இல்லை. சீரகமும் இல்லை. இது சீரகத்தை விட சிறியதாகவும், சிறிது டார்க் ப்ரௌன் கலரில் இருக்கும். மணம் மிகவும் அதிகம். டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்.

 

No comments:

Post a Comment