Friday 7 October 2016

கடாய் சிக்கன்

கடாய் சிக்கன்

கடாய் சிக்கன்

 

தேவையானவை:

 

பொடியாக நறுக்கிய பெரிய‌ வெங்காயம் - ஒன்றில் பாதி

 

பொடியாக நறுக்கிய பெங்களூர் தக்காளி - அரைத்துண்டு

 

கோழிக்கறி - அரை கிலோ

 

இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்

 

பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

 

உப்பு - தேவையான அளவு

 

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

 

மஞ்சள்தூள்- ஒரு சிட்டிகை

 

மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்

 

சீரகத்தூள் - கால் டீஸ்பூன்

 

கரம் மசாலா - அரை டீஸ்பூன்

 

கடாய் கிரேவி - 3 குழிக்கரண்டி    

 

தாளிக்க:

 

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 

பட்டை - சிறிய துண்டு

 

கிராம்பு - 2

 

ஏலக்காய் - 2

 

அன்னாசிப்பூ - சிறிதளவு

 

சீரகம் - ஒரு சிட்டிகை

 

நறுக்கிய பச்சை மிளகாய் - 1

 

அலங்காரம் செய்ய:

 

க்யூப்களாக நறுக்கிய குடமிளகாய் - 1

 

க்யூப்களாக நறுக்கிய பெரியவெங்காயம்- 1

 

க்யூப்களாக நறுக்கிய தக்காளி - 1

 

நீளமாக வெட்டிய இஞ்சி - சிறிய துண்டு

 

கொத்த‌மல்லித்தழை - சிறிதளவு

 

கடாய் மசாலாத்தூள் தயாரிக்க:

 

மல்லி (தனியா) - 50 கிராம்

 

காய்ந்த மிளகாய் - 4

 

சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்

 

செய்முறை:

 

அடுப்பில் கடாயை வைத்து மசாலாத்தூள் தயாரிக்கக் கொடுத்தவற்றை எண்ணெய் இல்லாமல் வறுத்து, மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்தவற்றைச்் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக பொரிய விடவும். அடுத்து இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி சேர்த்துப் புரட்டி விடவும். நறுக்கிய கோழிக்கறித் துண்டுகளைச் சேர்த்து, தேவையான அளவு உப்புப் போட்டு நன்கு கிளறவும். கோழிக்கறி தண்ணீர் விட ஆரம்பிக்கும் போது, கடாய் கிரேவியை 3 குழிக்கரண்டி சேர்த்து வேக விடவும். ஒரு டம்ளர் தண்ணீரில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கரைத்து அதை கோழிக்கறியுடன் சேர்த்து வேக விடவும். சிக்கன் வெந்த பிறகு, கடாய் மசாலாத்தூளை ஒரு டீஸ்பூன் சேர்த்துக்  கிளறி ஐந்து நிமிடம் மிதமான‌ தீயில் வேக வைத்து இறக்கவும். ஒரு பேனில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கி வைத்த குடமிளகாய், வெங்காயம், தக்காளியை லேசாக வதக்கி கடாயிலுள்ள கோழிக்கறி மீது கொட்டி அலங்கரிக்கவும். நிறைவாக நறுக்கிய இஞ்சி கொத்த‌மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment