Friday 7 October 2016

கடாய் கிரேவி/ பிரவுன் கிரேவி

கடாய் கிரேவி/ பிரவுன் கிரேவி

கடாய் கிரேவி/ பிரவுன் கிரேவி

 

பெரும்பாலான நான்-வெஜ் டிஷ்கள் செய்வதற்கு, இந்த கிரேவி, அடிப்படையான கிரேவியாக இருக்கிறது.

 

கிரேவி செய்ய:

 

எண்ணெய் - 50 மில்லி

 

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 5

 

பெங்களூர் தக்காளி - 5 (பேஸ்டாக தயாரித்துக் கொள்ளவும்)

 

மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்

 

மல்லித்தூள் (தனியாத்தூள்) - 5 டேபிள்ஸ்பூன்

 

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 

சீரகத்தூள் - 1 டீஸ்பூன்

 

உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், சிறிதளவு உப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். மூன்று ட‌ம்ளர் தண்ணீரில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலக்கி அதை கிரேவியில் ஊற்றி வேக விடவும். கிரேவி நுரை கட்டி வரும் போது தக்காளி பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக கொதிக்க விடவும். எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும்போது அடுப்பை அணைத்து இறக்கிப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment