Friday 7 October 2016

ஷகி கிரேவி

ஷகி கிரேவி

ஷகி கிரேவி

 

இந்த கிரேவியை வைத்தே மொகலாய டிஷ்கள் தயாரிக்கப்படுகின்றன.

 

தேவையானவை:

 

நீளமாக வெட்டிய வெங்காயம் - 1

 

முந்திரிப்பருப்பு - 100கிராம்

 

வெள்ளை மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

 

உப்பு - தேவையான அளவு

 

சர்க்கரை - 1 டீஸ்பூன்

 

தாளிக்க:

 

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 

பட்டை - சிறிய துண்டு

 

கிராம்பு - 1

 

ஏலக்காய் - 1

 

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1

 

இஞ்சி-பூண்டு விழுது - தலா  அரை டீஸ்பூன்

 

செய்முறை:

 

அடுப்பில் ஒரு கடாயை வைத்து நீளமாக நறுக்கிய வெங்காயம், முந்திரியைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பத்து நிமிடம் வேக விட்டு, அடுப்பை அணைத்து ஆற விடவும். வெந்த பொருட்களுடன் வேக வைத்த தண்ணீர் சிறிது ஊற்றி, பேஸ்ட் போல அரைத்து வைக்கவும்.

 

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றித் தாளிக்க வேண்டியதைத் தாளிக்கவும். அரைத்த முந்திரி விழுதை இதில் சேர்த்து வதக்கவும். அரை டம்ளர் தண்ணீரைக் கலவையில் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போதே மிளகுத்தூள் சேர்த்துக் கிளறவும். தேவையான அளவு உப்பு, சர்க்கரை சேர்த்துக் கலக்கி கிரேவி பதம் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment