கவுனி அரிசி பழ புட்டிங்
கவுனி அரிசி பழ புட்டிங்
தேவையானவை:
கவுனி அரிசி - அரை கப்
பால் - 3 கப்
ஆப்பிள், வாழைப்பழம் - தலா ஒன்று
வெனிலா எசன்ஸ் - கால் டீஸ்பூன்
கடல்பாசி (சைனா கிராஸ், அகர்அகர்) - 10 கிராம்
சர்க்கரை - அரை கப்
செய்முறை:
சுத்தம் செய்த கவுனி அரிசியை போதுமான அளவு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, அரிசியை நன்கு கழுவி குக்கரில் சேர்த்து 3 கப் பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 5 விசில் வரை வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். வெந்த அரிசியை மசிக்கவும். இத்துடன் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். பிறகு கடல் பாசியை வெதுவெதுப்பான நீரில் கலக்கி, அரிசி கலவையுடன் சேர்த்து கலக்கவும். பழங்களை விருப்பமான சைஸில் நறுக்கி வெனிலா எசன்ஸ் சேர்த்து அரிசி கலவையுடன் சேர்க்கவும். பிறகு, அழகான கிளாஸ்களில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து `ஜில்'லென்று பரிமாறவும்.

No comments:
Post a Comment