Tuesday, 4 October 2016

கவுனி அரிசி இட்லி

கவுனி அரிசி  இட்லி

கவுனி அரிசி  இட்லி

 

தேவையானவை:

 

 கவுனி அரிசி - 2 கப்

 இட்லி அரிசி - ஒரு கப்

 கெட்டி அவல் - ஒரு கப்

 உளுந்து - ஒரு கப்

 வெந்தயம் - கால் டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

கவுனி அரிசி மற்றும் இட்லி அரிசி ஒன்றாகச் சேர்த்தும், அவலைத் தனியாகவும், உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒன்றாக சேர்த்தும் ஒட்டுமொத்தமாக 4 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, எல்லாவற்றையும் நன்கு கழுவி ஒன்றாக கிரைண்டரில் சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலக்கி 8 மணி நேரம் புளிக்க விடவும். மறுநாள் புளித்த மாவை நன்கு கலக்கி, இட்லித் தட்டில் துணி விரித்து மாவை ஊற்றி மூடி போட்டு ஆவியில் 8 முதல் 10 நிமிடம் வேகவிட்டு எடுத்தால் கவுனி அரிசி இட்லி தயார். சட்னியுடன் பரிமாறவும்.

 

 

No comments:

Post a Comment