பருப்புப் பாயசம்
பருப்புப் பாயசம்
தேவையானவை:
பாசிப்பருப்பு - 200 கிராம்
வெல்லம் - 500 கிராம்
நெய் - 100 மில்லி
சுக்குத்தூள் - 1 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
திராட்சை (கிஸ்மிஸ்) - 20 கிராம்
தேங்காய் - 2
செய்முறை:
நெய்யில், முந்திரிப்பருப்பு திராட்சையை (கிஸ்மிஸ்) வறுத்து வைக்கவும். தேங்காயில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பாலைத் தனியாக எடுத்து வைக்கவும். பாசிப்பருப்பைக் குழைய வேக வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து தண்ணீர் ஊற்றி வெல்லத்தைச் சேர்த்து கரைய வைத்து வடிகட்டி மீண்டும் கடாயில் ஊற்றி அடுப்பில் ஏற்றவும். இதில் தேங்காயின் 3-வது பாலை ஊற்றி கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் வெந்த பருப்பை இதில் சேர்த்து வேக விடவும். பருப்பும், வெல்லமும் கலந்து கொதிக்கும் போது இரண்டாவது பாலை ஊற்றவும். இந்தக் கலவை பாயசம் பதத்துக்கு வரும் போது சிம்மில் வைத்து முதலில் எடுத்த பாலை ஊற்றி கலக்கி சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பு, திராட்சை (கிஸ்மிஸ்), சேர்த்துக் கலக்கி மேலே நெய் ஊற்றிக் கிளறிப் பரிமாறவும்.

No comments:
Post a Comment