வாழைக்காய் வறுவல்
வாழைக்காய் வறுவல்
தேவையானவை:
நாட்டு வாழைக்காய் - 4
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1 லிட்டர்
செய்முறை:
வாழைக்காயைத் தோலை நன்றாக அழுந்த சீவி எடுக்கவும். வாழைக்காயின் சதைப்பகுதியை ஒரு விரல் நீளத்துக்கு வெட்டி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். பொரித்தெடுத்த வாழைக்காயின் மேல் உப்பு, மிளகாய்த்தூள் தூவி, பிசிறிப் பரிமாறவும்.

No comments:
Post a Comment