சீராலம்
சீராலம்
தேவையானவை:
புழுங்கலரிசி - 1/2 கப்
துவரம்பருப்பு - அரை கப்
கடலைப்பருப்பு - அரை கப்
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஒன்றாக ஊற வைத்து, அதில் உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், தேங்காய்த்தூள் சேர்த்து கொரகொரப்பாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து மாவில் சேர்த்துக் கலக்கி, சிறிய இட்லித் தட்டில் ஊற்றி, அவித்தெடுத்துத் சூடாகப் பரிமாறலாம்.

No comments:
Post a Comment