Sunday, 2 October 2016

சீராலம் இட்லி மஞ்சூரியன்

சீராலம் இட்லி மஞ்சூரியன்

சீராலம் இட்லி மஞ்சூரியன்

 

தேவையானவை:

 

சீராலம் இட்லி - 1 கப்

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 3

பூண்டு - 5 பல்

வெங்காயத் தாள் - 2

சிவப்பு மிளகாய் பேஸ்ட் - 3 டேபிள்ஸ்பூன்

தக்காளி சாஸ் - 4 டேபிள்ஸ்பூன்

சோயா சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

சர்க்கரை - 2  டீஸ்பூன்

சோளமாவு - ஒரு கைப்பிடி அளவு

மைதாமாவு - ஒரு கைப்பிடி அளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை-தேவையான அளவு

 

 

 

செய்முறை:

 

மைதாமாவு, சோளமாவு இரண்டையும் சம அளவு எடுத்து உப்பு, மிளகுத்தூள் சிறிதளவு சேர்த்து, தண்ணீர் கலந்து நன்றாகப் பிசையவும். இந்தக் கலவையில் சீராலம் இட்லியை 'டிப்' செய்து, எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி சாஸ், சிவப்பு மிளகாய் பேஸ்ட், சோயா சாஸ், ஒரு டீஸ்பூன் சோள மாவு, சிறிதளவு மிளகுத்தூள், உப்பு, வெங்காயத்தாள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். நன்றாகக் கொதித்ததும், பொரித்து வைத்திருக்கிற இட்லியை இந்த கிரேவியில் சேர்த்துக் கிளறவும். இறுதியாக, கறிவேப்பிலை சேர்த்து இறக்கிவிடலாம்.

 

No comments:

Post a Comment