Tuesday, 4 October 2016

கவுனி அரிசி முருங்கைக்கீரை ரொட்டி

கவுனி அரிசி  முருங்கைக்கீரை ரொட்டி

கவுனி அரிசி  முருங்கைக்கீரை ரொட்டி

 

தேவையானவை:

 

 கவுனி அரிசி மாவு - ஒரு கப்

 வெங்காயம் - ஒன்று

 பச்சைமிளகாய் - 2

 இஞ்சி - சிறிய துண்டு

 சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்

 கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு -

தலா அரை டீஸ்பூன்

 உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

 முருங்கைக்கீரை - ஒரு கப்

 நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 

செய்முறை:

 

மிக்ஸியில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, சீரகம் சேர்த்து விழுதாக அரைக்கவும். கவுனி அரிசி மாவுடன் நெய் சேர்த்துப் பிசிறவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். இத்துடன் அரைத்த விழுது சேர்த்து நிறம் மாற வதக்கி உப்பு சேர்க்கவும். இக்கலவையை மாவில் கொட்டி பிசிறவும். இதனுடன் முருங்கைக்கீரை சேர்த்துக் கிளறி, வெதுவெதுப்பான நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, மாவை கெட்டியாகப் பிசையவும். பிறகு, தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவிய வாழை இலையில் மாவை நடுவில் துளைகள் கொண்ட அடைகளாகத் தட்டிப் போடவும். பிறகு அப்படியே கல்லுக்கு மாற்றி, இருபுறம் வேகவைத்து எடுத்தால் ரொட்டி தயார்.

 

குறிப்பு:

 

ரொட்டியை வேக வைக்கும்போது அதன் நடுவே மற்றும் சுற்றிலும் எண்ணெயை ஊற்றி வேகவிடவும்.

 

No comments:

Post a Comment