Saturday 8 October 2016

கரும்புச்சாறுப் பொங்கல்

கரும்புச்சாறுப் பொங்கல்

கரும்புச்சாறுப் பொங்கல்

 

தேவையானவை:

 

பச்சரிசி - ஒரு கப்

பாசிப் பருப்பு - அரை கப்

கரும்புச் சாறு - 2 கப்,

நெய் - சிறிதளவு

நறுக்கிய பேரீச்சை - கால் கப்

முந்திரி - 25 கிராம்

ஏலக்காய்த்தூள் - சிறிது

 

செய்முறை:

 

வெறும் வாணலியில் பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வறுத்து, பச்சரிசியோடு சேர்த்துக் கழுவவும். பிறகு குக்கரில் இட்டு இரண்டு கப் கரும்புச்சாறு, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பை சிம்மில் வைத்து மூன்று விசில்கள் வரும் வரை வேக வைத்து இறக்கவும். குக்கரில் பிரஷர் போனதும் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடாக்கி, நறுக்கிய பேரீச்சை, முந்திரி, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து பொங்கலில் இட்டுக் கிளறிப் பரிமாறுங்கள். கரும்புச்சாறே தேவையான இனிப்பைத் தருவதால் சர்க்கரை தேவையில்லை. தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.

 

 

No comments:

Post a Comment