Saturday 8 October 2016

புட்டரிசி சர்க்கரைப் பொங்கல்

புட்டரிசி சர்க்கரைப் பொங்கல்

புட்டரிசி சர்க்கரைப் பொங்கல்

 

தேவையானவை:

 

புட்டரிசி - ஒரு கப் (சிவப்புக் கைக்குத்தல் அரிசிதான் புட்டரிசி)

பாசிப் பருப்பு - அரை கப்

வெல்லம் - 2 கப்

ஏலக்காய்ப் பொடி - அரை டீஸ்பூன்

ஜாதிக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை

பச்சைக்கற்பூரம் - ஒரு சிட்டிகை

முந்திரி, பாதாம், உலர் திராட்சை - சிறிதளவு

நெய் - அரை கப்

 

 

 

செய்முறை:

 

பாசிப் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து வைத்துக் கொள்ளவும். பொதுவாக, புட்டரிசி வேக நேரம் எடுக்கும் என்பதால், வெந்நீரில் அரைமணி நேரம் ஊற வைத்து, பிறகு மிக்ஸியில் தண்ணீர் இல்லாமல் ரவை போல உடைத்துக் கொள்ளவும். உடைத்த புட்டரிசி, வறுத்த பாசிப் பருப்பை குக்கரில் சேர்த்து, நான்கு கப் தண்ணீர் ஊற்றி, 4 விசில் வரும் வரை சிம்மில் வேக வைக்கவும்.

வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் இட்டு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி, அடுப்பில் ஏற்றிக் காய்ச்சவும். வெல்லக்கரைசலின் பச்சை வாசனை போனதும் அதில் வெந்த அரிசி, பருப்புக் கலவையைச் சேர்த்துக் தீயைக் குறைத்துக் கிளறவும். பிறகு, ஏலக்காய், ஜாதிக்காய் பொடி, பச்சைக் கற்பூரம், முந்திரி, பாதாம், திராட்சை ஆகியவற்றைச் சேர்த்து நெய் விட்டுக் கிளறி இறக்கவும்.

 

No comments:

Post a Comment