Saturday 8 October 2016

சம்பா கோதுமை ரவை சர்க்கரைப் பொங்கல்

சம்பா கோதுமை ரவை சர்க்கரைப் பொங்கல்

சம்பா கோதுமை ரவை சர்க்கரைப் பொங்கல்

 

தேவையானவை:

 

சம்பா கோதுமை ரவை - ஒரு கப்

பாசிப் பருப்பு - அரை கப்

வெல்லம் - 2 கப்

ஏலக்காய்ப் பொடி - அரை டீஸ்பூன்

ஜாதிக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை

பச்சைக்கற்பூரம் - ஒரு சிட்டிகை

முந்திரி, பாதாம், உலர் திராட்சை - சிறிதளவு

நெய் - அரை கப்

 

செய்முறை:

 

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விடாமல் சம்பா கோதுமை ரவை மற்றும் பாசிப் பருப்பைத் தனித்தனியாகப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். இவை இரண்டையும் குக்கரில் சேர்த்து நான்கு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து, நான்கு விசில் வரும் வரை வேக விடவும். வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் இட்டு மூழ்கும் அளவுக்கு, தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி அதை அடுப்பில் ஏற்றிக் காய்ச்சவும். வெல்லக்கரைசலின் பச்சை வாசனை போனதும் கோதுமை ரவை கலவையில் ஊற்றி மெல்லியத் தீயில் கிளறி... ஏலக்காய்ப் பொடி, ஜாதிக்காய்ப் பொடி, பச்சைக் கற்பூரம் ஆகியவற்றைச் சேர்த்து, முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து நெய் விட்டுக் கிளறி இறக்கவும்.

 

 

No comments:

Post a Comment