Saturday 8 October 2016

சிவப்பு அவல் புட்டு

சிவப்பு அவல் புட்டு

சிவப்பு அவல் புட்டு

 

தேவையானவை: சிவப்பு அவல்  2 கப், தேங்காய்த் துருவல்  கால் கப், சர்க்கரை  அரை கப், நெய்  4 டேபிள்ஸ்பூன், உப்பு  ஒரு சிட்டிகை

 

செய்முறை: சிவப்பு அவலை வெறும் வாணலியில் லேசாக வறுத்து மிக்ஸியில் ரவை பதத்துக்கு உடைக்கவும். அதனை வாயகன்ற பாத்திரத்தில் போடவும். அரை கப் தண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்கவைத்து உடைத்த ரவையின் மீது ஊற்றி, 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு திறந்து கைகளால் நன்கு கலந்து (தேவைப்பட்டால் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றலாம்), சர்க்கரை, நெய், தேங்காய்த் துருவல் சேர்த்து கலந்து சாப்பிடவும்.

 

குறிப்பு: அவல் எளிதில் ஜீரணமாகும். வெல்லம், தேங்காய்... சோர்வு நீக்கி, புத்துணர்ச்சி தரும்.

 

 

 

No comments:

Post a Comment