Sunday, 2 October 2016

தூதுவளை துளசிச் சாறு

தூதுவளை துளசிச் சாறு

தூதுவளை துளசிச் சாறு

 

தேவையானவை:

 தூதுவளை இலைகள் - 100 கிராம்

 துளசி - 100 கிராம்

 ரசப்பொடி - 25 கிராம்

 பெருங்காயத்தூள் - 10 கிராம்

 புளி - 15 கிராம் (வடிகட்டி சாறு எடுக்கவும்)

 கொத்தமல்லித்தழைத்தண்டு - 1 கட்டு (பொடியாக நறுக்கி வைக்கவும்)

 உப்பு - தேவையான அளவு

 நல்லெண்ணெய் - 100 மில்லி

 கடுகு - 15 கிராம்

 உளுத்தம் பருப்பு - 15 கிராம்

 கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

 பெரிய வெங்காயம் - 200 கிராம் (பொடியாக நறுக்கவும்)

 மிளகு - 25 கிராம்

 சீரகம் - 25 கிராம்

 பூண்டு - 25 கிராம்

 மிளகாய்த்தூள் - 20 கிராம்

 தக்காளி - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்)

 மஞ்சள்தூள் - 10 கிராம்

 

செய்முறை:

தூதுவளை இலைகளைச் சுத்தம் செய்து கழுவி வைக்கவும். எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து வதக்கி, தக்காளியைச் சேர்த்து மைய வதக்கவும். இத்துடன் கொத்தமல்லித்தழைத்தண்டு சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதில் புளிக்கரைசலைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்ததும் தூதுவளை, துளசி சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இறுதியாக ரசப்பொடி, பெருங்காயத்தூள், உப்பு  சேர்த்து ஒரு நிமிடம் கழித்து இறக்கி வடிகட்டி, ஒரு பவுலில் ஊற்றவும். பரிமாறும் போது தூதுவளை, துளசி இலைகள் சேர்த்துப் பரிமாறவும்.

 

 

No comments:

Post a Comment