Sunday, 2 October 2016

நாட்டுக்கோழி ரசம்

நாட்டுக்கோழி ரசம்

நாட்டுக்கோழி ரசம்

 

தேவையானவை:

 கோழிக்கால் - அரை கிலோ

 பூண்டு - 5 கிராம்

 மிளகு - 15 கிராம்

 ஏலக்காய் - 5 கிராம்

 சோம்பு - 10 கிராம்

 பிரிஞ்சி இலை - 10 கிராம்

 பெரிய வெங்காயம் - கால் கிலோ (பொடியாக நறுக்கவும்)

 மிளகாய்த்தூள் - 20 கிராம்

 கிராம்பு - 5 கிராம்

 கொத்தமல்லித்தழைத்தண்டு - கால் கிலோ (பொடியாக நறுக்கவும்)

 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 15 கிராம்

 கறிவேப்பிலை - 25 இலைகள்

 சீரகத்தூள் - 15 கிராம்

 பாசிப்பருப்பு - 100 கிராம்

 எண்ணெய் - 100 மில்லி

 உப்பு - தேவையான அளவு

 தக்காளி - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்)

 மஞ்சள்தூள் - 10 கிராம்

 கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க

 

செய்முறை:

கோழிக்காலை சுத்தம் செய்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு பூண்டு, மிளகு, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, வெங்காயம், கறிவேப்பிலை, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும். இத்துடன் கோழிக்காலை சேர்த்து வதக்கி, தக்காளி, கொத்தமல்லித்தழைத்தண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு போட்டு வேக விடவும். கோழிக்கால் பாதி வெந்ததும், பாசிப்பருப்பைக் கழுவி தேவையான அளவு தண்ணீருடன் சேர்த்து 45 நிமிடம் வேக விட்டு வடிகட்டி இறக்கி ஒரு பவுலில் ஊற்றவும். பரிமாறும் போது சீரகத்தூள், கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். விருப்பம் உள்ளவர்கள் கோழிக்காலில் இருக்கும் வெந்த சதைப்பகுதியை எடுத்து, சூப்பில் சேர்த்துப் பரிமாறலாம்.

No comments:

Post a Comment