Friday, 7 October 2016

சத்து மாவு

சத்து மாவு

சத்து மாவு

 

தேவையானவை:

 

ராகி - 50 கிராம்

கம்பு - 50 கிராம்

சோளம் - 50 கிராம்

பார்லே (வால் கோதுமை) - 25 கிராம்

பயத்தம் பருப்பு  - 25 கிராம்

உடைத்த கோதுமை  - 2 டேபிள்ஸ்பூன்

ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்

பிரவுன் ரைஸ்  - 2 டேபிள்ஸ்பூன்

ஜவ்வரிசி - 2 டேபிள்ஸ்பூன்

பொட்டுக்கடலை  - 2 டேபிள்ஸ்பூன்

பாதாம்  - 2 டேபிள்ஸ்பூன்

முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்

வேர்க்கடலை  - 2 டேபிள்ஸ்பூன்

ஏலக்காய் - 5

சுக்கு - சிறிதளவு

சர்க்கரை, உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

ராகி, கம்பு, சோளம், உடைத்த கோதுமை, பார்லே (வால் கோதுமை) எல்லாவற்றையும் கல், தூசு நீக்கி தனித்தனியாக எண்ணெய் விடாமல் வாசம் வரும் வரை வறுக்கவும். இதேபோல் ஓட்ஸ், பிரவுன் ரைஸ், ஜவ்வரிசி, பொட்டுக்கடலை, பாதாம், முந்திரிப்பருப்பு, பயத்தம் பருப்பு வேர்க்கடலை, ஏலக்காய், சுக்கு ஆகியவற்றையும் வாசம் வரும் வரை நன்றாக வறுத்து வைக்கவும். வறுக்கும் போது தீயைக் குறைத்து வைத்து வறுக்கவும். ஒவ்வொன்றுக்கும் அதன் தன்மையைப் பொறுத்து நேரம் மாறுபடும். மேலே சொன்னவற்றை எல்லாம் சூடு ஆறியதும் மிக்ஸியில் மைய அரைத்து காற்றுப் புகாத டப்பாவில் சேர்த்து வைக்கவும். சத்து மாவு கஞ்சி செய்யும் போது தண்ணீரில் மாவைக் கரைத்து வாணலியில் விட்டு, குறைந்த தீயில் வேக விட்டு உப்பு அல்லது சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.J

No comments:

Post a Comment