பூண்டுக் காரக் குழம்பு
பூண்டுக் காரக் குழம்பு
தேவையானவை:
பூண்டு - 20 பல்
சின்னவெங்காயம் - 10
தக்காளி - 3 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
புளி - பெரிய எலுமிச்சை அளவு (தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டிக்கொள்ளவும்).
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 25 மில்லி
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
மல்லி (தனியா) - ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை சிறிதளவு, 4 காய்ந்த மிளகாய், 4 பூண்டு, 5 சின்னவெங்காயம், ஒரு தக்காளி, மல்லி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கி அரைத்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்துத் தாளித்து, மீதம் இருக்கும் காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து, அரைத்து வைத்திருக்கும் மசாலாவைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதில் புளிக்கரைசலைச் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

No comments:
Post a Comment