பொரித்த குழம்பு
பொரித்த குழம்பு
தேவையானவை:
முருங்கைக்காய் - 2 (சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்)
செளசெள - 1 (மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்)
அவரைக்காய் - 10 (மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்)
உருளைக்கிழங்கு - 2 (மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
காய்ந்த மிளகாய் - 4
மிளகு - ஒரு டீஸ்பூன்
சின்னவெங்காயம் - 10
சோம்பு - ஒரு டீஸ்பூன்
கசகசா - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் - அரை மூடி (துருவிக் கொள்ளவும்)
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தயிர் - சிறிதளவு
செய்முறை:
மிக்ஸியில் தேங்காய்த்துருவல், அரை டீஸ்பூன் சோம்பு, சின்னவெங்காயம், காய்ந்த மிளகாய், மிளகு, கசகசா, கால் டீஸ்பூன் சீரகம் எடுத்து சிறிது தயிர் விட்டு பேஸ்டாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, மீதம் இருக்கும் சோம்பு, சீரகம், கறிவேப்பிலை இட்டு தாளித்து, நறுக்கிய முருங்கைக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு , அவரைக்காய், செளசெள சேர்த்து மஞ்சள்தூள் போட்டுக் கிளறி அரைத்து வைத்திருப்பதையும் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு உப்பு சேர்த்து இறக்கவும்.

No comments:
Post a Comment