காலிஃப்ளவர் மிளகு மசாலா
காலிஃப்ளவர் மிளகு மசாலா
தேவையானவை:
காலிஃப்ளவர் - ஒன்று (சிறியது)
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - ஒன்று
(பொடியாக நறுக்கவும்)
மஞ்சள்தூள் - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் - அரை மூடி
பச்சை மிளகாய் - 2
சோம்பு - ஒரு டீஸ்பூன்
வறுத்துப் பொடிக்க:
மல்லி (தனியா) - 3 டேபிள்ஸ்பூன்
மிளகு - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
அரைக்க வேண்டியதை மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் மல்லி (தனியா) மற்றும் மிளகைச் சேர்த்து வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். காலிஃப்ளவரை சிறு சிறு பூக்களாக உதிர்த்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். மைக்ரோவேவ் அவன் பாத்திரத்தில் எண்ணெய், வெங்காயம், தக்காளி சேர்த்து கலந்து ஹை பவரில் 2 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். இத்துடன் சுத்தம் செய்த காலிஃப்ளவர், மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து ஹை பவரில் 3 நிமிடம் வேகவைக்கவும். காலிஃப்ளவர் வெந்ததும், வறுத்துப் பொடித்த பொடியை தூவி கலந்து மீண்டும் ஒரு நிமிடம் ஹை பவரில் வேகவைத்து எடுக்கவும். இத்துடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து கலந்து 2 நிமிடம் ஹை பவரில் வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.
குறிப்பு:
காலிஃப்ளவர் பூக்களை உப்புத் தண்ணீரில் 10-15 நிமிடம் போட்டு வைத்திருந்தாலே பூச்சிகள் வெளியே வந்துவிடும். பிறகு பூக்களை அலசியெடுத்து உபயோகப்படுத்தலாம்.


No comments:
Post a Comment