வெஜிடபிள் பீட்ஸா
வெஜிடபிள் பீட்ஸா
தேவையானவை:
பீட்ஸா பேஸ் - ஒன்று (ரெடிமேட் பேஸ் கிடைக்கிறது)
வெங்காயம் - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கவும்)
குடமிளகாய் - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கவும்)
கேரட் - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கவும்)
தக்காளி கெட்சப் - தேவையான அளவு
சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
பீட்ஸா பேஸ் மீது தக்காளி கெட்சப்பை தடவவும். அதன் மேல் வெங்காயம், குடமிளகாய், தக்காளி, கேரட் ஆகியவற்றை ஒவ்வொன்றாக, பரவலாக தூவிவிடவும். பிறகு சீஸை துருவி தூவி விடவும். மைக்ரோவேவ் அவன் பிளேட்டில் பீட்ஸா பேஸை வைத்து மைக்ரோவேவ் கன்வெக்ஷன் மோடில் 180 டிகிரி செல்ஷியஸில் சீஸ் உருகும் வரை வைத்து எடுக்கவும். இது மிகவும் சுலபமாக வீட்டிலிருந்து செய்யக்கூடிய பீட்ஸா. இன்னும் கடைகளில் கிடைக்கக் கூடிய பீட்ஸா போல் தேவையென்றால் ஒரிகானோ, ஆலிவ்ஸ் போன்ற சில்லி ப்ளேக்ஸ் என்ற பொருட்கள் கடைகளில் கிடைக்கிறது. அவற்றையும் வாங்கி சீஸ் துருவல் தூவுவதற்கு முன்பு சேர்த்துக்கொள்ளவும்.
குறிப்பு:
சீஸ் துருவும் துருவியில் சிறிது எண்ணெய் தடவி விட்டு பிறகு சீஸை துருவினால் ஒட்டாமல் வரும். பீட்ஸா பேஸில் உப்பு இருக்கும் என்பதால் கூடுதலாக வேறு எங்கும் சேர்க்கத் தேவையில்லை.

No comments:
Post a Comment