Saturday 8 October 2016

ஸ்டஃப்டு முட்டை

ஸ்டஃப்டு முட்டை

ஸ்டஃப்டு முட்டை

 

தேவையானவை: வேக வைத்த‌ முட்டை - 2, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1,மயோனைஸ் சாஸ்  தேவையான அளவு, சில்லி சாஸ்  ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள்  ஒரு சிட்டிகை, நறுக்கிய குடமிளகாய்  கால் கப் (சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள்), பார்ஸ்லி இலை / கொத்தமல்லித்தழை  ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 1

 

செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். முட்டையை நீளவாக்கில் இரண்டாக நறுக்கி, நடுவே இருக்கும் மஞ்சள் கருவை எடுத்து விடவும்.  ஒரு பவுலில் மயோனைஸ், வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மிளகுத்தூள் மற்றும் குடமிளகாய் சேர்த்துக் கலந்து முட்டையின் மஞ்சள் கரு இருந்த இடத்தில் வைத்து நிரப்பவும். அதன் மேல் சிறிது மிளகாய்த்தூள் தூவி, மேலே பார்ஸ்லி அல்லது நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment