Saturday 8 October 2016

இளநீர் தோசை

இளநீர் தோசை

இளநீர் தோசை

 

தேவையானவை: இளநீர் வழுக்கை  ஒரு கப், இளநீர் - 3 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் விழுது  கால் டீஸ்பூன், உப்பு  தேவையான, சர்க்கரை  ஒரு சிட்டிகை, கார்ன்ஃப்ளார்  தேவையான அளவு, கொத்தமல்லித்தழை  ஒரு கைப்பிடி, எண்ணெய்  தேவையான அளவு.

 

செய்முறை: இளநீர் வழுக்கையை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து விழுதாக்கி, ஒரு பவுலில் கொட்டி... இளநீர், பச்சை மிளகாய் விழுது, உப்பு மற்றும் 2 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார் சேர்த்துக் கலக்கவும். அதில் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். தோசை தவாவில், சிறிய ஊத்தப்பங்களாக ஊற்றி கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

 

No comments:

Post a Comment