உருளைக்கறி
உருளைக்கறி
தேவையானவை:
உருளை - 350 கிராம் (பெரிய துண்டுகள் போடவும்)
சின்னவெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்)
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத் தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - முக்கால் டீஸ்பூன்
சோம்புத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
புளி - 15 கிராம் (கரைத்து வைக்கவும்)
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - தாளிக்க
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
செய்முறை:
உருளையை உப்பு, சிறிது மஞ்சள்தூள், போட்டு வேகவைத்து எடுத்துத் தோல் உரிக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்தவற்றைச் சேர்த்து வதக்கவும். இதில் வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கியதும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். ஒரு நிமிடம் கிளறி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் சேர்த்துக் கிளறவும். இதில் புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் உருளையைச் சேர்த்து சுண்டி வரும் போது கிளறவும். உருளையின் மீது மசாலா ஏறியதும், கொத்தமல்லித்தழை தூவவும், பிறகு இறக்கிப் பரிமாறவும்.

No comments:
Post a Comment