Saturday, 1 October 2016

ஓரிதழ் தாமரை ரசம்

ஓரிதழ் தாமரை ரசம்

ஓரிதழ் தாமரை ரசம்

 

தேவையானவை:

 ஓரிதழ் தாமரை இதழ்கள் - ஒரு கைப்பிடி (அ) ஓரிதழ் தாமரைப் பொடி - 2 டீஸ்பூன்

 தக்காளிப் பழம் - 3

 பருப்பு வேகவைத்த தண்ணீர் - 3 டம்ளர்

 தட்டிய பூண்டுப் பல் - 6

 மிளகு - ஒரு டீஸ்பூன்

 சீரகம் - ஒரு டீஸ்பூன்

 கறிவேப்பிலை - சிறிதளவு

 கடுகு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்

 நெய் - 2 டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

வாணலியில் நெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பூண்டுப்பல் சேர்த்து வதக்கவும். இதில் தக்காளியை மசித்து சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். இத்துடன் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி, ஓரிதழ் தாமரை இதழ்கள் (அ) பொடியைச் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு, பருப்புத் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி, பரிமாறினால் ஓரிதழ் தாமரை ரசம் தயார்.

No comments:

Post a Comment