Friday 7 October 2016

பனீர் மக்கன் வாலா

பனீர் மக்கன் வாலா

பனீர் மக்கன் வாலா

 

தேவையானவை:

 

மக்னி கிரேவி - 2 குழிக்கரண்டி

 

உப்பு - தேவையான அளவு

 

பனீர் துண்டுகள் - 50 கிராம்

 

வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

 

கஸூரி மேத்தி - அரை டீஸ்பூன்

 

கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

 

சீரகத்தூள் - கால் டீஸ்பூன்

 

திக் ஃபிரஷ் க்ரீம் - 3 டேபிள்ஸ்பூன்

 

தாளிக்க:

 

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

 

சீரகம் - ஒரு சிட்டிகை

 

நறுக்கிய பச்சை மிளகாய் - 1

 

இஞ்சி விழுது - அரை டீஸ்பூன்

 

பூண்டு விழுது - கால் டீஸ்பூன்

 

செய்முறை:

 

அடுப்பில் பேனை வைத்துத் தாளிக்க வேண்டியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளிக்கவும். இதில் மக்னி கிரேவி, தேவையான அளவு உப்பு சேர்த்து (மக்னி கிரேவியில் ஏற்கெனவே உப்பு இருக்கும் என்பதால், கவனம் தேவை) மிதமான தீயில் நன்கு கிள‌றி, பனீர் துண்டுகள் சேர்த்து, மிதமான தீயில் பனீர் துண்டுகளில் கிரேவி சேரும் வரை கொதிக்க விடவும். இதில் கஸூரி மேத்தி, வெண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்யவும். ஒரு நிமிடம் கழித்து, கரம் மசாலாத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கிளறி ஃபிரஷ் க்ரீம் சேர்த்து ஒரு கலக்குக் கலக்கி ஒரு நிமிடம் கழித்து இறக்கிப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment