வாழைப்பூ வடை
வாழைப்பூ வடை
தேவையானவை:
பொடியாக நறுக்கிய வாழைப்பூ - 1
கடலைப் பருப்பு - 1 கப்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கடலைப் பருப்பை இரண்டு மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும். பின்னர் தண்ணீரை வடிகட்டி, மஞ்சள்தூள், பெருஞ்சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு பேஸ்ட், சீரகம், மஞ்சள் தூள் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு எல்லாம் கலந்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெயைச் சூடேற்றி தயாரித்து வைத்திருக்கும் உருண்டைகளைத் தட்டிப் போட்டு பொன்னிறமாக வறுபட்டதும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.
No comments:
Post a Comment