ஸ்டீம்டு க்ரம்ப்ஸ் ஃப்ரைட் இட்லி
ஸ்டீம்டு க்ரம்ப்ஸ் ஃப்ரைட் இட்லி
தேவையானவை:
காக்டெயில் இட்லி (சிறிய இட்லி) - 250 கிராம்
மைதா மாவு - 3 டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
வினிகர் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
முட்டை - 1
எண்ணெய் - தேவையான அளவு
பிரெட் க்ரம்ஸ் - 1 கப்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் வினிகர், உப்பு, மிளகுத்தூள், மைதா மாவு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும். பின்னர், இதில் காக்டெயில் இட்லியைச் சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும். முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி, நன்றாக அடித்துக் கலக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். ஊற வைத்திருக்கும் இட்லியை முட்டையில் முக்கியெடுத்து, பின்னர் பிரெட் துகள்களில் புரட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இரண்டு புறமும் பொன்னிறமானதும் இறக்கிவிடலாம். தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.
No comments:
Post a Comment