Thursday, 6 October 2016

தாய் சிக்கன் கறி ரெட்

தாய் சிக்கன் கறி ரெட்

தாய் சிக்கன் கறி ரெட்

 

தேவையானவை:

 

 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)

 பேசில் லீவ்ஸ் - 25 கிராம் (அல்லது துளசி இலைகள்)

 பழுத்த சிவப்பு மிளகாய் - 1 (நீளவாக்கில் நறுக்கவும்)

 லெமன் கிராஸ் - 10 கிராம் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)

 எலுமிச்சை இலை - 5 (நீளமாக மெல்லியதாக நறுக்கவும்)

 தாய் சிஞ்சர்( கலங்கல்) - 10 கிராம் (தோல் நீக்கி நீளமாக நறுக்கவும்)

 தேங்காய்ப்பால் - 200 மில்லி (முதல் பால்)

 தாய் கறி பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன் (தாய்லாந்து நாட்டின் கரம் மசாலா சென்னை டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)

 உப்பு - தேவையான அளவு

 போன்லெஸ் சிக்கன் துண்டுகள் - 200 கிராம் (ஒரு துண்டு 15 கிராம் அளவுக்கு இருக்க வேண்டும்)

 சிவப்பு, பச்சை, மஞ்சள் நிற கேப்ஸிகம் - 30 கிராம் (டைஸ் வடிவத்துக்கு நறுக்கவும்)

 சர்க்கரை - 1 டீஸ்பூன்

 மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

 

செய்முறை:

 

அடுப்பில் பேனை வைத்து எண்ணெய் ஊற்றி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதனுடன் பழுத்த மிளகாய், பேசில் லீவ்ஸ், தாய் ஜிஞ்சர்(கலங்கல்), எலுமிச்சை இலை, லெமன் கிராஸ் சேர்த்து வதக்கி, சிக்கன் சேர்த்து, குறைந்த தீயில் அரை பாகம் வேகும் வரை வதக்கவும். சிக்கன் வெந்ததும் தண்ணீர், தேங்காய்ப்பால், கேப்ஸிகம், தாய் கறி பேஸ்ட், உப்பு, மிளகுத்தூள், சர்க்கரை சேர்த்து வேக விடவும். சிக்கன் வெந்ததும் மேலே சிறிது பேசில் லீவ்ஸ் தூவி இறக்கிப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment