Thursday, 6 October 2016

மஷ்ரூம் பெப்பர் ஃபிரை

மஷ்ரூம் பெப்பர் ஃபிரை

மஷ்ரூம் பெப்பர் ஃபிரை

 

தேவையானவை:

 

மஷ்ரூம் - 200 கிராம் (இரண்டாக நறுக்கவும்)

மிளகுத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

சோம்பு - அரை டேபிள்ஸ்பூன்

இஞ்சி-பூண்டு விழுது -  ஒரு டீஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)

மிளகாய்த்தூள் -  ஒரு டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

கால் டேபிள்ஸ்பூன் சோம்புடன் மிளகுத்தூள் சேர்த்து லேசாக வறுத்து மிக்ஸியில் பொடியாக்கி வைக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு, மீதம் இருக்கும் சோம்பு சேர்த்து பொரிந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக சேர்த்து வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, மஞ்சள்தூள், மஷ்ரூம் சேர்த்து நன்றாக வதக்கவும். இரண்டு நிமிடத்தில் இறக்கி, அரைத்து வைத்திருக்கும் சோம்பு, மிளகுத்தூளை சேர்த்து கிளறவும். பரிமாறும் முன் கொத்தமல்லித்தழையைத் தூவி, சூடாகப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment