ஃபிஷ் சம்பல்
ஃபிஷ் சம்பல்
தேவையானவை:
மத்தி மீன் - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
சர்க்கரை - அரை டீஸ்பூன்
டொமேட்டோ சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 4 (விழுதாக அரைக்கவும்)
தக்காளி - 1 (ஸ்லைஸ்களாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம் - 1(டைஸ் வடிவத்துக்கு நறுக்கவும்)
பூண்டு - 2 (பொடியாக நறுக்கவும்)
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 100 மில்லி
சம்பல் செய்ய:
புளிக்கரைசல் - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 6 (பேஸ்டாக அரைக்கவும்)
பெரிய வெங்காயம்- 300 கிராம் (பெரிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைக்கவும்)
ரெட் சில்லி பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
டொமேட்டோ கெட்சப் - 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
மீனைக் கழுவி மஞ்சள்தூள், உப்பு கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் மீனைப் போட்டுப் பொரித்தெடுத்து தனியாக வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு, சம்பல் செய்ய கொடுத்த பூண்டு பேஸ்ட்டை போட்டு பச்சை வாசனை போக வதக்கவும். இதில் வெங்காய விழுதைச் சேர்த்து வதக்கி, டொமேட்டோ கெட்சப், முந்திரி விழுது, சில்லி பேஸ்ட், புளிக்கரைசல், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி, அடுப்பை அணைத்து ஆற விடவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி தேவையானவற்றில் உள்ள பொருட்களை ஒன்றின்பின் ஒன்றாக சேர்த்து வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இதில் நாம் தயாரித்து வைத்த சம்பலை இரண்டு கரண்டி எடுத்து ஊற்றி, உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள், டொமேட்டோ சாஸ் சேர்த்து வதக்கி கிரேவி பதம் வந்ததும் பொரித்து வைத்திருக்கும் மீனைச் சேர்த்து மிக்ஸ் செய்து அடுப்பை அணைத்து சாதத்தோடு சேர்த்துப் பரிமாறவும்.

No comments:
Post a Comment