Thursday, 6 October 2016

புளி சாதம்

புளி சாதம்

புளி சாதம்

 

தேவையானவை :

 

நல்லெண்ணெய் - 10 மில்லி

சோம்பு - 5 கிராம்ாம்

மல்லி -10 கிராம்ாம்

எள் - 15 கிராம்ாம்

கறிவேப்பிலை - 10 கிராம்ாம்

நெய் - 50 மில்லி

காய்ந்த மிளகாய்- 3

பச்சை மிளகாய் -2

வெந்தயம் - 5 கிராம்ாம்

வேக வைத்த அரிசி - 200 கிராம்

சீரகம்- 5 கிராம்

புளி - 150 கிராம்

கடுகு - 5 கிராம்

உளுந்து- 5 கிராம்்

பெருங்காயம் - 10 கிராம்

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 

செய்முறை :

 

புளியைத் தனியாக ஊற வைத்துக்கொள்ளவும். நெய்யில் மல்லி, சோம்பு, சீரகம், கறிவேப்பிலை, எள் சேர்த்து வறுத்து, ஆறிய பின், இதை அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து பொரிக்கவும். இத்துடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவைச் சேர்த்துக் கலந்து, புளிக்கரைசலை ஊற்றி, 10 நிமிடம் கொதிக்கவிடவும். வேக வைத்த சாதத்தில் சிறிது நெய் சேர்த்துக் கிளறி, புளிக்கரைசலை அதில் ஊற்றிக் கிளறி கொத்தமல்லித்தழையைத் தூவிப் பரிமாறவும்.

 

 

No comments:

Post a Comment