Thursday, 6 October 2016

மலபார் கோழி வறுவல்

மலபார் கோழி வறுவல்

மலபார் கோழி வறுவல்

 

தேவையானவை:

 

கோழிக் கறி- 150 கிராம்

வெங்காயம் - 2

தேங்காய் எண்ணெய்- 150 மில்லி

தேங்காய்த் துருவல்- 80 கிராம்

கறிவேப்பிலை - 10 கிராம்

தக்காளி- 3 (நறுக்கவும்)

சோம்பு - 5 கிராம்

பட்டை இலை - 10 கிராம்

ஏலக்காய் - 5 கிராம்

அன்னாசிப்பூ- 5 கிராம்

மிளகுத்தூள் - 10 கிராம்

இஞ்சி - பூண்டு விழுது- 40 கிராம்

இடித்த இஞ்சி - 1

 

செய்முறை :

 

எண்ணெயைச் சூடாக்கி அன்னாசிப்பூ, பட்டை இலை, இஞ்சி, கறிவேப்பிலை, ஏலக்காய், மிளகுத்தூள் போன்றவற்றைச் சேர்த்து வெடிக்கும் வரை வறுக்கவும். துருவியத் தேங்காய் சேர்த்து மீண்டும் வறுத்து ஆற வைத்து, அரைத்து எடுத்துக்கொள்ளவும். தேங்காய் எண்ணெயில் கோழிக்கறி, சோம்பு, வெங்காயத்தை வதக்கி, அரைத்து வைத்திருக்கும் மசாலாவுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்துக் கிளறி நறுக்கி வைத்துள்ள தக்காளியைப் போட்டு, 15 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கிப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment