Saturday 8 October 2016

மராட்டி கத்திரிக்காய் சாதம்

மராட்டி கத்திரிக்காய் சாதம்

மராட்டி கத்திரிக்காய் சாதம்

 

தேவையானவை: கடலைப்பருப்பு  கால் கப், உளுந்தம்பருப்பு  கால் கப், பாசிப்பருப்பு  கால் கப், மல்லி (தனியா) - 2 டேபிள்ஸ்பூன், மிளகு - 1 டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், சிவப்பு மிளகாய் - 10, பட்டை - 2, கிராம்பு - 2, கத்திரிக்காய்  அரை கிலோ, வடித்த சாதம் -  4 கப், உப்பு  தேவையான அளவு, புளிக்கரைசல்  சிறிதளவு, முந்திரி - 15, துருவிய கொப்பரைத் தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை  சிறிதளவு, நெய்  சிறிதளவு, கடுகு  சிறிதளவு, எண்ணெய்  சிறிதளவு

 

செய்முறை: ஒரு கடாயில் கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, பாசிப்பருப்பு, மல்லி (தனியா), மிளகு, சீரகம், சிவப்பு மிளகாய், பட்டை, கிராம்பு ஆகியவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும். பிறகு, அதனை கத்திரிக்காயில் ஸ்டஃபிங் போல உள்ளே வைத்து அடைத்துக் கொள்ளவும்.

 

இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து அது பொரிந்தவுடன் கத்திரிக்காய், உப்பு, புளிக்கரைசல் சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் சிறிதளவு தண்ணீரைச் சேர்த்து மூடி வைத்துவிடவும். நன்றாக வெந்தவுடன் வடித்த சாதம், முந்திரி மற்றும் தேங்காய்த் துருவலை நெய்யில் பொன்னிறமாக வறுத்து தூவிப் பரிமாறலாம்.

 

 

No comments:

Post a Comment